சாதாரணமாக நாம் இணையத்தில் ஏதாவது தகவலை தேட வேண்டும் என்றால் தானாகவே நமது கைகள் கூகுள் குரோமில் சென்று தான் தேடும்.
சுந்தர் பிச்சை யார் என்று தெரிந்த நமக்கு பரிசா டப்ரிஸை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தான் கூகுள் குரோமினை பாதுகாக்கும் இளவரசி.
பொதுவாக சமூக வலைத்தளங்கள் அனைத்தும் அதன் வலைத்தளத்தில் இருக்கும் ஏதேனுமொரு பிழையினை கண்டறிந்து கூறுவோர்க்கு அதற்காக கணிசமாக ஒரு தொகையினை கொடுத்து அவர்களை வேலைக்கும் எடுத்து கொள்ளும்.
அவ்வாறு 2007-ல் கூகுள் குரோம் நிறுவனத்திற்கு பயிற்சிக்காக வந்தவர்தான் பரிசா டப்ரிஸ். Computer science and Web Designing-ஐ படித்த பரிசா டப்ரிஸ் Angelfire என்னும் மென்பொருள்கள் மூலம் இணையதளப்பக்கங்களை வடிவமைத்தார்.
ஆனால் அந்த மென்பொருளில் அதிகமாக விளம்பரங்கள் காட்டப்பட்டதால் அசவுகரியத்தை உணர்ந்த பரிசா அதன் கோட்களில்(Code) சில மாறுதல்களை உண்டாக்கினார்.
இதன் பின்னர் அதில் காட்டப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைந்தது. எளிதில் ஹேக் செய்யும் திறமையுள்ள பரிசாவினை கூகுள் நிறுவனமானது பணியில் அமர்த்தியது.
ஆனால் அந்த மென்பொருளில் அதிகமாக விளம்பரங்கள் காட்டப்பட்டதால் அசவுகரியத்தை உணர்ந்த பரிசா அதன் கோட்களில்(Code) சில மாறுதல்களை உண்டாக்கினார்.இதன் பின்னர் அதில் காட்டப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைந்தது. எளிதில் ஹேக் செய்யும் திறமையுள்ள பரிசாவினை கூகுள் நிறுவனமானது பணியில் அமர்த்தியது.
பரிசா தன் 30 பேர் கொண்ட குழுவுடன் தளத்தில் ஏதேனும் பிழை உள்ளதா என பார்த்து அதனை உடனடியாக மாற்றுவார். இதனால் மூலம் ஹேக்கர்கள்(Hacker) தகவல்களை திருடுவது கடினம்.
கோட்களை எழுதுவதில் ஆர்வமுள்ள இவர்,”எனது திறமையினை நான் நல்ல வழியில் பயன்படுத்தி கொள்வகிறேன் என்றும், பெண்கள் இது போன்ற மென்பொருள்களில் கோட்களை(Code) எழுதுவதற்கான தங்களின் திறமையினை வளர்த்து கொள்ள வேண்டும்”, என பரிசா கூறியுள்ளார்.