கூகுளின் புதிய திட்டம்: அடுத்த வருடத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றது!
இன்று இணையத்தள உலகை ஆளும் அரசனாக கூகுள் திகழ்கின்றது.
இந் நிறுவனம் இணைத்தள உலகைத் தாண்டியும் பல்வேறு துறைகளில் காலடிபதித்து வெற்றி கண்டுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் முற்றுமுழுதாக மீளப் புதுப்பிக்கக்கூடிய வளத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சக்தியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன்படி 2017ம் ஆண்டிலிருந்து தனது டேட்டா சென்டர்கள் மற்றும் அலுவலங்கள் என்பவற்றில் 100 சதவீதம் மீளப்புதுப்பிக்கக்கூடிய மின்சக்தியினை பயன்படுத்தவுள்ளது.
இதில் சூரியப்படலம் மூலமான மின்னுற்பத்தி மற்றும் காற்று மூலமான மின்னுற்பத்தி என்பன அடங்கும்.
இதற்கான முன்னேற்பாடுகளை கூகுள் நிறுவனம் 2010ம் ஆண்டிலிருந்தே மேற்கொண்டு வந்திருந்தது.
தற்போது பல்வேறு நாடுகளிலும் காணப்படும் கூகுள் நிறுவனங்களுக்கு தேவையான வருடத்திற்கான மின்சக்தி நுகர்வு மணிக்கு 5.7 டெராவாட்ஸ் ஆகக் காணப்படுகின்றது.
இத் தேவை முழுவதும் புதிய திட்டத்தின் மூலம் பூர்த்திசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.