குழம்பி நின்ற டுபிளசி.. நுவன் பிரதீப் வீசிய மேஜிக் பந்து இதுதான்..!
இலங்கை- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க்கில் நடந்து வருகிறது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 426 ஓட்டங்கள் எடுத்தது. டுமினி (155), அம்லா (134) இருவரும் சதம் விளாசினர்.
இலங்கை அணி சார்பில், பந்துவீச்சில் மிரட்டிய நுவன் பிரதீப், லஹிரு குமார தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
இந்நிலையில் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசிவை நுவன் பிரதீப் ஆட்டமிழக்க செய்த விதம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
அவர் வீசிய பந்தில் குழம்பி போன டுபிளசி 2வது ஸ்லிப்பில் பிடி கொடுத்து 16 ஓட்டங்களில் நடையை கட்டினார்.
நேற்றைய 2வது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 80 ஓட்டங்கள் குவித்திருந்தது.