இணைய உலகை ஆக்கிரமித்து நிற்கும் கூகுள் நிறுவனத்தின் மற்றுமொரு உற்பத்தியே யூடியூப் ஆகும்.
வீடியோ பகிரும் தளமாக விளங்கும் யூடியூப்பின் ஊடாக வயது வேறுபாடு இன்றி அனைத்து தரப்பினருக்குமான பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இவற்றின் வரிசையில் தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான யூடியூப் அப்பிளிக்கேஷனை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது விரைவில் Sony, LG மற்றும் Samsung ஆகிய நிறுவனங்களின் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளில் கிடைக்கப்பெறும்.
அத்துடன் இதன் ஊடான சேவை முதற்கட்டமாக 26 நாடுகளில் பெற முடியும். எனினும் குறித்த நாடுகள் எவை என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.