இந்தியா மற்றும் இலங்கைக்கிடையில் புதிய விமான சேவையொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான சேவை சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து இயங்கவுள்ளது.
நாளொன்றுக்கு மூன்று முறை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இடம்பெறும் இந்த விமான சேவை குறைந்த விலை விமான சேவையாக கருதப்படுகிறது.
இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இதன் முதலாவது விமான சேவை இயக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.