அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், அலியா பாட், மவுனி ராய், நாகர்ஜுனா அக்கினி ஆகியோர் நடிப்பில் அயன் முகர்ஜி இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட படம் பிரம்மாஸ்த்ரா. கரண் ஜோகர், அபூர்வா மேஹ்டா, நமிட் மல்ஹோத்ரா, ரன்பீர் கபூர், அயன் முகர்ஜி மற்றும் பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள். மூன்று பாகங்களாக இப்படம் தயாராகிறது. முதல் பாகம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸாகிறது.
முன்னதாக இப்படத்தின் லோகோ, மார்ச் 4ஆம் தேதி, மகா சிவராத்திரியை முன்னிட்டு கும்பமேளாவில், வானத்தில் டிரோன்கள் மூலம் வெளியிட்டனர். இந்த நிகழ்வில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அயன் முகர்ஜி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வு குறித்து படக்குழு கூறியதாவது :
கரண் ஜோகர் : “கும்பமேளா கலாச்சார வரலாற்றின் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இந்நாளில் லோகோவை வெளியிட்டது மிகவும் சிறப்பு என்றார்.
அயன் முகர்ஜி : கும்ப மேளாவில் மகா சிவராத்திரி விழாவில் நாங்கள் எங்களது படத்திற்கான பயணத்தை துவங்கியத்தை சிறந்ததாக கருதுகிறேன். இந்த லோகோவை வெளியிட எங்களுக்கு 6 மாத காலம் தேவைப்பட்டது. ட்ரோன்கள் மூலம் இந்த பிரம்மாண்ட லோகோவை வெளியிட பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதை தயார்படுத்த பல யுக்திகள் கையாளப்பட்டது என்றார்.
தொடர்ந்து இன்று இப்படத்தின் லோகோ உடன் கூடிய மோஷன் போஸ்டரையும் வெளியிட்டனர்.