குணசித்திர நடிகர் சண்முகசுந்தரம் இன்று (ஆகஸ்ட் 15) காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77. கரகாட்டக்காரன், மவுனகீதம், தாவணி கனவுகள், நானே ராஜா நானே மந்திரி உட்பட பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்நாதன், இளையராஜா ஆகியோரின் இசைக்குழுக்களில் பாடகராக இருந்துள்ளார்.
கடந்த சில காலமாகவே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் இருவரும், டப்பிங் கலைஞர்களாக உள்ளனர்.