”குஜராத் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை,” என பாக். முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறினார்.
குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி ராலான்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ”குஜராத் தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே மணிசங்கர் இல்ல நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்குடன் பாக்., முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர், பாக்., துாதரக அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் ஆலோசித்தனர்,” என்றார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த மன்மோகன் சிங், ”ஆதாரமில்லாமல் பேசிய பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார்.
இந்நிலையில் பாக். முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறியதாவது:
மணிசங்கர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, ‘குஜராத் ‘என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை. இந்திய அரசியல் விவகாரங்களில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. தேவையில்லாமல் என் பெயரை இழுத்தது ஆச்சர்யமாக உள்ளது,” என்றார்.