கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை சுமார் 3 மணி நேரம் பொழிந்த கன மழையில் மட்டும் 75 மில்லி மீற்றஇருக்கும் அதிக மழை பொழிந்த நிலையில் கனகாம்பிகை குளம் வான்பாய்வதாக மாவட்ட நீர்ப்பாசணப் பொறியியலாளர் சுதாகரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பொறியியலாளர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,
கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டின் மிக அதிக மழை வீழ்ச்சி நேற்றைய தினம் மாலையே கிடைத்துள்ளது. இதில் நேற்று மட்டும் சுமார் 3 மணி நேரம் பொழிந்த கன மழையில் மட்டும் 75 மில்லி மீற்றர் மழை பொழிந்த நிலையில் அதிக நீர் வரத்தும் கானப்பட்டது. இதனால் குளங்களிற்கு தற்போது நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கனகாம்பிகை குளம் அதன் கொள் அளவினை எட்டி வான்பாய்கின்றது. அதேநேரம் 12 அடி கொள் அளவினையுடைய பிரமந்தனாறுக் குளமானது 11.2 அடியை எட்டிவிட்டது. அதேபோன்று 8.9 அடி கொள் அளவினையுடைய குடமுறுட்டிக் குளமும் 7.8 அடிநீரைத் தொட்டுவிட்டது.
இதேபோன்று ஏனைய குளங்களிற்கும் நீர் வேகமாக வந்துகொண்டுள்ள நிலையிலும் 10 அடி போல் அளவினையுடைய கரியாலை நாகபடுவான் குளத்திற்கு மட்டும் தற்போது 2.6 அடி நீர்மட்டுமே வந்தடைந்துள்ளது. என்றார்.