கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் தமிழ் பெண் ஒருவரை சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிப்பாள் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டார்.
பேருந்து ஒன்றில் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய 31 வயதுடைய சிறிலங்கா படைச் சிப்பாயே நாச்சிக்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை நீதிமன்றத்தில் முன்னிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.