கிளிநொச்சி ஏ9 வீதி ஆனையிறவு உமையாள்புரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய சொகுசு பேருந்துடன், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உயிரிழந்துள்ளார்.
குறித்த அதேபகுதியில் நேற்றைய தினம் சாரதியின் நித்திரையால் பாலத்துடன் மோதுண்டு சொகுசு பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது.
நேற்று இடம்பெற்ற விபத்தின் பின்னர் விபத்தில் சிக்கியிருந்த பஸ் அந்த இடத்தில் இருந்து அகற்றப்படாமையாலேயே இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதி போக்குவரத்து பொலிசார் பொறுப்புடன் செயற்பட்டாமையே இன்றைய விபத்துக்கான காரணம் என பிரதேசவாசிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.