நடிகை கஸ்தூரிக்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை. என்றாலும் அடிக்கடி சர்ச்கை கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து தன்னை லைம் லைட்டிலேயே வைத்திருப்பார். இப்போது தமிழ் போராளிகளை சாடியிருக்கிறார்.
கடந்த ஆண்டு இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின்போது காவிரி பிரச்சினைக்காக பெரிய போராட்டம் நடந்தது. அதனால் பிரிமியர் லீக் போட்டிகள் நடத்தக்கூடாது என்ற போராட்டமும் நடந்தது, கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள் தாக்கப்பட்டார்கள். இதனால் சென்னையில் நடக்க இருந்த போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் நேற்று சென்னை சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. இதுகுறித்து கஸ்தூரி தனது டுவிட்டரில் தெரிவித்திருப்பதாவது:
இன்று இந்தியன் பிரிமீயர் லீக் விமர்சையாக துவக்கம். போன வருடம் போராடிய தமிழர் நலவிரும்பிகள் ஏன் இந்த வருடம் காணோம்? ஒருவேளை, தமிழ்நாட்டில் காவிரி கரை புரண்டு ஓடுவதால், கர்நாடக பெங்களூரு அணியும் தமிழ்நாடு சென்னை அணியும் கிரிக்கெட் ஆடுவதற்கு இப்பொழுது யாருக்கும் ஆட்சேபமில்லையோ? கிரிக்கெட் அரசியல் என்று எழுதியுள்ளார்.