இங்கிலாந்தில் நடக்கவுள்ள உலக கிண்ணப் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான பரிசு தொகையினை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 10 மடங்கு அதிகரித்துள்ளது.
இங்கிலாந்தில் வரும் ஜீன் மாதம் 24ம் திகதி பெண்களுக்கான 11வது உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது.
இப்போட்டியில் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 நாடுகள் பங்கு பெறுகின்றன.
கடந்த 2013-ம் ஆண்டு உலக கிண்ண போட்டியில் பரிசு தொகையாக 2,00,000 டொலர் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த பரிசு தொகையானது 10 மடங்கு உயர்த்தப்பட்டு 2 மில்லியன் டொலராக்கப்பட்டுள்ளது.
பெண்கள் கிரிக்கெட்டுக்கு அங்கீகாரம் அளிக்கும் நோக்கில் இந்த பரிசு தொகையானது உயர்த்தப்பட்டுள்ளதாக ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்டன் கூறியுள்ளார்.
மேலும், பெண்கள் உலக கிண்ணக் கிரிக்கெட் போட்டியினை நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.