திருகோணமலை மாவட்டம், கிண்ணியாவில் வான்-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அருனலு குளத்தில் உயிரிழந்த நிலையில் யானையின் சடலம் இன்று (10) மாலை மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
யானையின் சடலம் தொடர்பில் அப்பகுதி விவசாயிகள், வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தெரிவித்துள்ளதை தொடர்ந்து, கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று யானையின் மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதன்போது 8 வயது மதிக்கத்தக்க பெண் யானையே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், யானையின் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்காக கால்நடை வைத்திய அதிகாரியினால் உடற்கூற்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வான்-எல பொலிஸார் மற்றும் கந்தளாய் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முன்னெடுத்து வருகின்றனர்.