பிரபல மலையாள நடிகர் திலீப் தனது படங்களில் ஜோடியாக நடித்த நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்துகொண்டு பல ஆண்டுகள் கழிந்த நிலையில், அவரை விவாகரத்து செய்தார். அதைத் தொடர்ந்த சில ஆண்டுகள் தனது மகளுடன் தனியாக வசித்து வந்த திலீப், தன்னுடன் பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை காவ்யா மாதவனை கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் அவ்வப்போது பத்திரிக்கையாளர் பள்ளிசேரி என்பவர் திலீப் பற்றிய பகிரங்கமான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். நடிகை காவ்யா மாதவன், நிஷல் சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டு குறுகிய காலத்திலேயே அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை விட்டு பிரிந்தார். இதன் பின்னணியில் திலீப் இருந்ததாக தற்போது அந்தப் பத்திரிகையாளர் இன்னொரு பகிரங்க தகவலை கூறியுள்ளார்.
குறிப்பாக நிஷால் சந்திரன், காவ்யா மாதவனை திருமணம் செய்த சில நாட்களிலேயே காவ்யா மாதவனிடமிருந்து விலகி இருக்குமாறும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. திலீப் ரசிகர்கள் இவர் இப்படி கூறியதற்காக வசைபாடி வந்தாலும், இவரது கருத்துகளை இதுவரை திலீப் பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது