காவிரி பிரச்சனையால் கன்னட நடிகர்கள் மீது வழக்கு – அதிர்ச்சியில் திரையுலகம்
காவிரி பிரச்சனை ஓயவில்லை என்றாலும் கொஞ்சம் குறைந்துள்ளது என்று கூறலாம். ஆனால் கர்நாடகாவில் பிரச்சனை அதிகமாக வெடித்ததற்கு கன்னட நடிகர்களின் பேச்சு தான் காரணம் என வழக்கறிஞர் ஜெயபால் கூறியுள்ளார்.
கன்னட நடிகர்கள் உபேந்திரா, புனித் ராஜ்குமார், தர்ஷன் உள்ளிட்டோர் தமிழருக்கு எதிராக பேசியதுடன், காவிரி நீரைத் தரக்கூடாது என வலியுறுத்தினர். அதன் பிறகு தான் வன்முறை வெடித்தது.
எனவே கன்னட மக்களை தமிழர்களுக்கு எதிராக தூண்டியதாக வழக்கறிஞர் ஜெயபால் கோவை 2வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு அக்டோபர் 3ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.