ஒரு 17-மில்லியன் டொலர்கள் ஆராய்ச்சி ஆய்வு என்ன முக்கிய காரணத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதே காரணத்தினால் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியுபவுன்லாந்தின் வடக்கு கடல் பகுதி வெப்பமடைந்து வரும் வெப்பநிலை காரணமாக எட்டு மீற்றர்கள் வரையிலான தடிப்பு கொண்ட அபாயகரமான ஐசினால் மூடப்பட்டடுள்ள காரணத்தால் ஆர்க்டிக் காலநிலை மாற்ற ஆய்வு கைவிடப்பட்டது.
இந்த ஆய்வு திட்டத்திற்கு முன்னணியில நிற்கும் மனிரோபா பல்கலைக்கழகம் ஹட்சன் குடா திட்டம் ரத்து செய்யப்பட்டதென திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
ஆராய்ச்சி நோக்கங்களிற்காக இப்பகுதிக்கு வந்தடைய வேண்டிய கப்பல் தீவிர பனி நிலைமைகளினால் வந்தடைய தாமதமாகலாம் என்பதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பல்கலைக்கழகங்கள் மற்றும் 40-விஞ்ஞானிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
ஆய்வு குழு இந்த ஆய்வை ஆறு நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தபோதிலும் இக்காலம் போதாதென தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வு திட்டத்திற்கு தலைமை தாங்கும் டாக்டர் டேவிட் பார்பர் வெப்பமடைந்து வரும் வெப்பநிலை ஐசை மெலிலிய தாக்கிவருகின்றதென கூறியுள்ளார்.அதிக காற்று புயல் ஏற்படும் பட்சத்தில் ஐஸ் தன்னிச்சையாக சமுத்திரத்தின் தெற்கு நோக்கி பயணிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த காலநிலை மாற்றம் கடல் வளங்கள் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை பயன் படுத்துவதற்கான திறனை பாதிக்கும் எனவும் தெரிவித்தார்.
தான் பயணிக்கும் கப்பலும் திசை மாறிக்கொண்டிருப்பதாகவும் இதனால் தங்கள் திட்டங்களை பூரணபடுத்த முடியாத நிலை தங்கள் அணிக்கு ஏற்பட்டிருப்பதாகவும் கூறுகின்றார்.
பார்பர் கடலோர காவல் பிரிவினர் மீது அதிருப்தியடையவில்லை ஆனால் உயிர்களையும் சொத்துக்களையும் காப்பாற்றுவது விஞ்ஞான திட்டத்தை விட அதிக முக்கியமானதென கருதுகின்றார்.
நாட்டிலுள்ள அனைவருக்கும் இது ஓரு எச்சரிக்கை அழைப்பு எனவும் கூறப்படுகின்றது.