காலில் கடுமையான வலி, கமலை பார்க்க ரஜினிக்கு தடை- பரபரப்பு தகவல்கள்
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் நல்ல நண்பர்கள். எங்களுக்குள் போட்டி என்பது சினிமாவில் மட்டும் தான் என்பதை பல வருடங்களுக்கு முன்பே கூறியவர்கள்.
இந்நிலையில் சமீபத்தில் கமல் மாடியிலிருந்து கால் தவறி கீழே விழுந்தார், இதை தொடர்ந்து சிகிச்சை எடுத்து குணமாகிய நிலையில் மீண்டும் அவருக்கு கால் வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் சில தினங்களுக்கு முன் இவருக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்ததாம், சென்னை வந்த ரஜினி உடனே கமலை பார்க்கவேண்டும் என்று மருத்துவமனைக்கு சென்றாராம்.
ஆனால், ரஜினியின் உடல்நிலையை மனதில் கொண்டு ‘நீங்கள் சென்றால் இன்ஸ்பெக்ஷன் ஆகிவிடும்’ என லதா தடை விதித்தாராம், பின் போனில் தொடர்பு கொண்டு கமலுக்கு ரஜினி ஆறுதல் தெரிவித்துள்ளார்.