பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கியுள்ளது. ஏற்கனவே இதன் போஸ்டர் பலரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பையை சேர்ந்த ரவுடி மஸ்தானின் கதை என்று சொல்லப்பட்ட நேரத்தில் ரஞ்சித் அதை மறுத்தார்.
மும்பையில் தமிழ்ச்சங்கம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் திரவியம். இவருக்கு கூடுவாலா சேட் என்னும் இன்னொரு பெயரும் உள்ளது.
நெல்லையிலிருந்து மும்பை சென்று தமிழர்களுக்கு வேலை வாங்கி கொடுத்து அவர்களுக்காகவே குரல் கொடுத்த திரவியம் என்பவரின் கதை தான் இது என சொல்லப்படுகிறது.