காலால் உணவை எடுத்து உட்கொள்ளும் கையில்லாத குழந்தை
உணவை கரண்டி மூலம் எடுத்து உட்கொள்ளும் குழந்தைகள் பலர், அவ்வுணவை கீழே தமது முகமெங்கும் அப்பிக்கொள்வதுண்டு.
ஆனால், இரு கைகளும் இல்லாத ஒரு சிறுமி தனது கால் மூலம் உணவை கரண்டியால் எடுத்து உட்கொள்ளும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவைச் சேர்ந்த வஸலினா எனும் இச் சிறுமி யின் புகைப்படங்களை இச் சிறுமி யின் தாயான எல்மைரா கெனுட்ஸன் வெளியிட்டுள்ளார்.
இச் சிறுமி இரு கை களும் இல்லாமல் பிறந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.