உலகின் பல பாகங்களிலும் குடி நீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
மேலும் சில நாடுகளில் வெகு விரைவில் இப் பிரச்சினை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே காணப்படுகின்றன.
இதனைக் கருத்தில் கொண்டு மாற்று வழிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதில் ஒரு குழுவானது காற்றிலிருந்து நீரினை உறுஞ்சி எடுக்கக்கூடிய உபகரணம் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளது.
MIT மற்றும் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இதனைக் கண்டுபிடித்துள்ளனர்.
வளியில் 20 சதவீதத்திலும் குறைவான ஈரப்பதம் காணப்பட்டாலும் அதிலிருந்து நீரை தனியாக பிரித்து உறுஞ்சும் ஆற்றல் இக் கருவிக்கு காணப்படுகின்றது.
அதுமட்டுமல்லாது பாலைவனங்களிலும் இக்கருவி சிறப்பாக செயற்படக்கூடியது.
மேலும் உலகெங்கிலும் காற்றில் 13,000 ட்ரில்லியன் லீட்டர் தூய நீர் காணப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறித்த கருவில் Metal-Organic Framework எனும் விசேட பதார்த்தம் பயன்படுத்தப்படுகின்றது.
இதுவே நீரை உறுஞ்சும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஒரு கிலோகிராம் Metal-Organic Framework இனைக் கொண்டு 12 மணி நேரத்தில் காற்றிலிருந்து 2.8 லிட்டர் நீரை பெற்றுக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.