கார் வீட்டினுள் புகுந்து விபத்து: பெண்மணி காயம்
பெண்ணொருவர் செலுத்திய கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வீடொன்றுடன் மோதி சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை கனடாவின் Etobicoke பகுதியின் Batawa Cr. எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில், காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, வீட்டின் முன் யன்னல் சேதத்துக்குள்ளான போதிலும் பாரியளவிலான கட்டுமானச் சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த பெண், உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சிறியளவிலான காயமே ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.