கார் இருக்கை சரியாக கட்டப்படாததால் சிறு குழந்தை படுகாயம்.
கனடா-தனி கார் ஒன்று மோதியதில் 3-வயது குழந்தை பலத்த காயங்களிற்கு உள்ளாகியது.சனிக்கிழமை காலை இடம்பெற்ற இந்த விபத்திற்கு குழந்தையின் பெற்றோர்கள் குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கலாம் என கருதப்படுகின்றது.
குழந்தை சரியான முறையில் அவர்களிற்கான இருக்கையில் கட்டப்படாதமை விபத்திற்கு காரணமென பொலிசார் தெரிவித்தனர்.
குழந்தை சரியான முறையில் அமர்த்தப்படவில்லை.ஆசன பட்டி உபயோகிக்கப்பட்டுள்ளது போன்று தெரிவதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஒன்ராறியோ நெடுஞ்சாலை வாகன சட்டத்தின் பிரகாரம் எட்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள்- நிறை-36 கிலோ கிராமிற்கு குறைவாக இருப்பின் [80 இறாத்தல்கள் ]கொண்ட-பூஸ்டர் இருக்கையில் அமர்த்தப்பட வேண்டும்.
குழந்தையின் நிலை குறித்த தகவல் எதுவும் தெரியவரவில்லை.
இந்த விபத்து சனிக்கிழமை காலை 8மணிக்கு றோஸ் லேன் வீதிக்கு அருகில் அவெனியு வீதியில் இடம்பெற்றது.
இந்த விபத்தில் வேகமும் கவனத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
விசாரனை தொடர்கின்றது.