காணாமல்போன தாயையும் மகளையும் கண்டுபிடிப்பதற்காக கட்டுநாயக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
26 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகளுமே காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 29 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன பெண்ணின் கணவர் இது தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 071 8591639 அல்லது 011 2252222 என்ற கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.