அமெரிக்காவில் நீதிமன்றத்தில் உள்ள கழிவறையில் காதலர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
பிரெயன் மற்றும் மரியா ஸ்கல்ட்ஸ் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்கள்.
அதன்படி மொன்மவுத் கவுண்டியில் உள்ள நீதிமன்றத்தில் திருமணம் செய்ய காதலர்கள் வந்தார்கள்.
அப்போது பிரெயினின் தாய்க்கு ஆஸ்துமா நோய் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக ஆக்சிஜன் கிடைக்க அவர் நீதிமன்றத்தின் கழிவறை மற்றும் குளியலறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவர் சில மணி நேரம் இருப்பதே உடலுக்கு நல்லது என மருத்துவர்கள் கூறிய நிலையில் அங்கேயே பிரெயின் மற்றும் மரியாவின் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.
வேறு வழியில்லாமல் அவர்கள் அங்கேயே திருமணம் செய்து கொண்டனர். அடுத்த 45 நாட்களுக்கு குறித்த நீதிமன்றத்தில் திருமணம் செய்ய இயலாது என்பதால் இதற்கு மணமக்கள் ஒப்பு கொண்டனர்.
இதனிடையில் பிரெயின் தாய் உடல்நிலை தேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.