இலங்கை மின்சார சபையின் கல்முனை அலுவலகம் முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பதால் கல்முனை பிராந்திய மின் பாவனையாளர்கள் பெரும் சிரம்மங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.இரண்டு மாத நிலுவைகளுக்கும் முன்னறிவித்தலின்றி இந்த மின் துண்டிப்பு நடைபெறுவதாக மின் பானையாளர்கள் c தெரிவிக்கின்றனர்.
முன்னறிவித்தலின்றி மின்சாரத்தைத் துண்டிப்பதால் சிறு பிள்ளைகளும், நோயாளர்களும், குளிர்சாதனப்பெட்டிகள் பாவிப்போர்,உள்ளீட்ட சிறுகைத் தொழில் செய்வோரும் பெரிதும் பாதிக்கப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில்
நிலுவைகளைச்செலுத்தி,மின்துண்டிப்புக்கான தண்டணைக் கட்டணத்தைச் செலுத்தியும் ஐந்து மணிநேரத்தின் பின்பே மின் இணைப்பு வழங்கப்படுவதாக மின்பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை மின்சார சபையின் கல்முனை அலுவலக அதிகாரிகளின் திட்டமிடப்படாத செற்பாட்டினால் 1000 ரூபா மின்கட்டணம் செலுத்த வேண்டிய பானையாளர்கள் தண்டப் பணமாக 1100 ரூபா செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.இதனால் சாதாரண குடும்பங்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
மின் துண்டிப்பு தொடர்பாக வணக்கஸ்தலங்கள் ஊடாக முன் அறிவிப்புச் செய்வதன் மூலம் மின்பானையாளர்கள் நிலுவைகளை செலுத்தவதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள முடியும் இந்த விடையம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் கல்முனை அலுவலக அதிகாரிகள் திட்டமிடப்பட்ட செயற்பாட்டினை மேற்கொள்வதன் மூலம் பாவனையாளர்களின் அசௌகரியத்தைக் குறைக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.