அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பலியானவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மீட்புப் பணி அதிகாரிகள் தரப்பில், கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயிக்கு இதுவரை 31 பேர் பலியாகியுள்ளனர். 21 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் காணமல் போகியுள்ளனர்.
இதனால் தெற்கு கலிபோர்னியாவில் சுமார் 170,000 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் சுமார் 25,000 மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயரப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றனர்
காற்று வேகமாக வீசி வருவதால் மீட்பு பணியில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 8,000-க்கும் அதிகமான மீட்புப் பணி வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கலிபோர்னியா மாகாண வரலாற்றில் இதுவே மிக மோசமான காட்டுத் தீயாக கருதப்படுகிறது.