கலிபோர்னியா நகர மேயராக இந்திய பெண்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள குபெர்டினோ நகர மேயராக சவீதா வைத்தியநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த சவீதா வைத்தியநாதன், கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றார்.
அங்கு பள்ளி ஆசிரியை, வங்கி அதிகாரி என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர், தற்போது குபெர்டினோ நகர மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்நகரத்தின் உயரிய பொறுப்புக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவு செய்யப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்நகரத்திலேயே ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.