கறுப்பினத்தவரை உயிரோடு சவப்பெட்டியில் அடைத்த வெள்ளை ஆப்பிரிக்கர்கள்… நிறவெறியின் உச்சம்!
தென் ஆப்பிரிக்காவில் கறுப்பினத்தவரை வெள்ளை ஆப்ரிக்கர்கள் உயிரோடு சவப்பெட்டியில் அடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இனவெறி ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற பிறகும் கூட தென் ஆப்பிரிக்காவில் நிறவெறி கலவரங்கள் இன்றளவும் அரங்கேறி வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் இனவெறியால் கறுப்பின மக்கள் படும் துயரங்கள் உலகம் அறிந்தது. இந்நிலையில் அங்கு தற்போது கறுப்பின ஆப்பிரிக்கர் ஒருவரை உயிருடன் வலுக்கட்டாயமாக சவப்பெட்டியில் அடைக்கும் வெள்ளை ஆப்பிரிக்கர்கள் அவரை பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவதாகவும்,சவப்பெட்டிக்குள் பாம்பை விட்டுவதாகவும் மிரட்டுகின்றனர்.
இந்த சமூக வலைதளங்களில் வெளியான இந்த புகைப்படம் மற்றும் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கொடூர செயலில் ஈடுபட்ட வெள்ளை ஆப்பிரிக்கர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கண்டன குரல்கள் எழுந்துள்ளன.
இதனிடையே பாதிக்கப்பட்ட விக்டர் மிலாட்ஸ்வா என்ற கறுப்பின ஆப்பிரிக்கர் தனக்கு நியாயம் கிடைக்க வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2 பேரையும் சிறையிலடைக்க ஆணையிட்டதோடு மறு விசாரணையை வரும் ஜனவரி 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இதைத்தொடர்ந்து சிறையிலடைக்கப்பட்ட இருவரும் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பெயில் கோர போவதில்லை என தெரிவித்துள்ளனர்.