கரோலினா மாகாணத்தில் பள்ளியில் புகுந்து இளைஞர் துப்பாக்கிச் சூடு
அமெரிக்காவில், தெற்கு கரோலினா மாகாணத்தில் தந்தையை சுட்டுக்கொன்ற இளைஞன் அருகிலுள்ள பள்ளியிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஆசிரியர், மாணவர்கள் படுகாயமடைந்தனர். துப்பாக்கியால் சுட்ட இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அமெரிக்காவில், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள், இரவு விடுதிகள், நடன அரங்குகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது, அன்றாட நிகழ்வாகி விட்டது. அமெரிக்காவில், தெற்கு கரோலினா மாகாணம் அருகே ஆண்டர்சன் கவுண்டி பகுதியில் தந்தையை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞன் அருகிலுள்ள தொடக்கப் பள்ளிக்குள் நுழைந்து சரமாரியாக சுட்டத்தில் ஒரு ஆசிரியை மற்றும் இரண்டு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்ததும் பெற்றோர்கள் பள்ளி முன்பு குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்ட 14 வயது இளைஞரை வளைத்து பிடித்தனர். அந்த இளைஞனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மிகுந்த காயமடைந்த ஆசிரியரும், மாணவர்களும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.