கருப்புப்பண உலகில் வெள்ளை நாயகன் கமல்ஹாசன் தான்- பிரபல தயாரிப்பாளர் புகழாரம்
மத்திய அரசின் அறிவிப்பு பலரையும் புரட்டி போட்டுள்ளது, அதிலும் திரையுலகை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில் கருப்புப்பண உலகில் வெள்ளை நாயகன் கமல்ஹாசன் தான் என்று கூறியுள்ளார் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
விஸ்வரூபம் 2 படத்திற்காக ஒருசில கோடிகள் கமலுக்கு ஆஸ்கார் ரவிச்சந்திரன் கொடுத்ததாகவும், அத்தனை பணத்தையும் செக் ஆக வங்கியில் செலுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு குடிமகனும் கமல்ஹாசன் போல இருந்தால் இந்தியா விரைவில் வல்லரசாகிவிடும் என்கிற ரேஞ்சில் கூறியுள்ளார்.