கருத்தரிப்பு நோயாளிக்கு தனது சொந்த விந்தணுக்களை உபயோகித்த வைத்தியர்?.
கனடா-ஒன்ராறியோ வைத்தியர் ஒருவர் தவறான விந்தணுவை பெண் ஒருவரிற்கு செலுத்தியதற்காக இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.தற்சமயம் இவர் மீது மற்றொரு குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.
இவரிடம் சிகிச்சைக்கு வந்த குறிப்பிட்ட சில நோயாளிகளிற்கு தனது சொந்த உயிரியல் பொருளை உபயோகித்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஒட்டாவா குடும்பம் ஒன்று டாக்டார் பெர்னாட் நோர்மன் பார்வின் என்பவரிற்கு எதிராக தங்கள் 26-வயதுடைய மகளிற்கு உயிரியல் தந்தை டாக்டர் தான் என குற்றம் சாட்டி வழக்கு தொடரந்துள்ளனர்.
1990ல் டவினாவும் அவர் கணவரும் கருத்தரிக்க முயன்ற போது வைத்தியர் இவரின் கணவரின் விந்தணு என பொய் சொல்லி தனது விந்தணுவை டவினாவிற்கு செலுத்தியுள்ளார்.
தம்பதிகளிற்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் DNAசோதனை மூலம் பெண் டானியல் டிக்சனின்-டவினாவின் கணவர்-உயிரியல் குழந்தை இல்லை என தெரியவந்துள்ளது.
26-வயதுடைய றெபெக்கா டிக்சன்-டவினாவின் மகள்- பெற்றோருடன் இணைந்து இந்த சட்ட நடவடிக்கையை எடுத்துள்ளார். அது மட்டுமின்றி வன்கூவரை சேர்ந்த பெண் ஒருவரும் தான் பார்வினின் உயிரியல் மகள் என நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவரிற்கு தானும் உறவினர் என கூறியுள்ளார்.
டிக்சன் குடும்பம் பார்வினுடன் 1989ல் தொடர்பு கொண்டனர்.ஒட்டாவாவிலுள்ள Broadview Fertility கிளினிக்கிற்கு சிகிச்சைக்கு வந்தனர்.தனது கணவரின் விந்தணு தனக்கு செலுத்தப்பட்டதென டவினா நம்பினார்.
1990ல் றிபெக்கா பிறந்தார்.இந்த வருட ஆரம்பம் வரை இவளது தந்தை குறித்த கேள்வி வரவில்லை.
இரண்டு நீல-கண்கள் கொண்ட பெற்றோர்களிற்கு பிறவுன் கண்கள் கொண்ட பிள்ளை பிறக்க சாத்தியமில்லை என இவர்கள் அறிந்து கொண்டதன் பின்னரே இவர்களிற்கு கவலை தொடங்கியது.
குடும்பம் டிஎன்ஏ சோதனை செய்தனர்.2015-ஏப்ரலில் டானியல் டிக்சன் றிபெக்காவின் உயிரியல் தந்தையாக இருக்க 0 சதவிகித சாத்திய கூறுகள் என்பது தெரியவநதுள்ளது.
இதன் பின்னர் இவர்கள் பார்வினின் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை மருத்துவர்கள் மற்றும் ஒன்ராறியோ அறுவைச்சிகிச்சை மருத்துவர்கள் கல்லூரி மூலம் அறிய ஆரம்பித்தனர்.
தனக்கும் பார்வினிற்கும் இடையில் காணப்பட்ட உடல் ஒற்றுமையை கவனித்த றெபெக்கா மேலதிக தகவல்களை அறிய முயன்றார்.
வம்சாவளி ஆய்வு வலைத்தளம் இவளது டிஎன்ஏ விபரக்கொத்தை ஆராய்ந்ததில் தொகுப்பு மூலம் இவளது இவள் அஷ்கெனாசி ஜூவிஸ் என தெரியவந்துள்ளது.பார்வின் ஒட்டாவா ஜூவிஸ் சமுகத்தை சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டார்.
சில மாதங்களின் பின்னர் றெபெக்கா வன்கூவரை சேர்ந்த கத்ரின் பாமருடன்- றெபெக்கா கருத்தரித்த அதே புறோட் வியு கிளினிக்கில் கருத்தரித்தவர்.
பாமரும் தனது சொந்த முயற்சியால் பெயர் தெரியாத ஸ்பேம் கொடையாளரால் 1990ல் கருத்தரித்ததாக கண்டறிந்து கொண்டார்.
விசாரனை தொடர்கின்றது.