கமல்ஹாசன் உடல்நிலை பற்றி புதிய தகவல்
சென்ற மாதம், நடிகர் கமல்ஹாசன் தன் அலுவலகத்தில் தவறி விழுந்ததால் காலில் எலும்புமுறிவு ஏற்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
ரசிகர்கள் அனைவரும் அவர் விரைவில் குணமாகி திரும்பவும் நடிக்க தொடங்கவேண்டும் என பிராத்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், கமல் தன் ட்விட்டர் பக்கத்தில், உடல்நிலை பற்றி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது “ரசிகர்களுடனும் நண்பர்களுடனும் பகிர ஓர் நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்”
Was up on my feet. A small spin around the room. Of course with two to assist on either side like Gandhiji;). Today was less painful.