கபாலி படத்தை பார்க்க குவிந்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள்
கபாலி படத்தை பார்க்க ரசிகர்கள் மட்டுமின்றி நட்சத்திரங்களும் ஆவலாக இருந்தனர். அதிலும் தமிழ் நடிகர்கள் மட்டுமின்றி மலையாள நடிகர் ஜெயராம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தார்.
இதுமட்டுமின்றி நிவின் பாலி, சிவகார்த்திகேயன், அனிருத், விக்னேஷ் சிவன், பாலாஜி மோகன், தனுஷ், கார்த்திக் சுப்புராஜ், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என பல நட்சத்திரங்கள் பார்த்து ரசித்துள்ளனர்.
பார்த்த அனைவருமே படம் தங்களுக்கு மிகவும் பிடித்ததாகவும், ரஜினியை பல நாட்களுக்கு பிறகு புதிய தளத்தில் பார்த்ததாக கூறியுள்ளனர்.