கனேடிய ராணுவத்தில் அதிகரித்துவரும் பாலியல் துன்பியல் சம்பவங்கள்!
கனேடிய படைவீரர்கள் சம்பந்தமான பாலியல் துன்பியல் சம்பவங்கள் தொடர்பில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி (Chief of defence staff) Gen. Jonathan Vance அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குற்றவியல் விசாரணை தேவைப்படும் 106 பாலியல் துர்நடத்தை தொடர்பான சம்பவங்கள், இவ்வருடத்தின் முதல் ஆறு மாதகாலப் பகுதிக்குள் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, குறித்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இதன் பிரகாரம் 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2016 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற 174 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் 22 சதவிதம் அதிகரிப்பைக் காட்டுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை பாலியல் தாக்குதல்கள் (sexual assault) தொடர்பானவை ஆகும்.
ஆயினும், இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவங்களில், குற்றம் சாட்டப்பட்டவை, தண்டனை பெற்றவை ஆகியவற்றின் எண்ணிக்கை போன்றவை இவ் அறிக்கையில் குறிப்பிடபடவில்லை.