கனடிய முதல்வர்கள், பழங்குடி தலைவர்களுடன் யு.எஸ்.VP ஜோ பிடெனையும் சந்திக்கின்றார் ட்ரூடோ.
அடுத்த வாரம் உயர் ரக கூட்டத்தொடர்கள் ஒட்டாவாவில் இடம்பெற உள்ளன. இச்சந்திப்பில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ, கனடாவின் முதல்வர்கள், பழங்குடியின தலைவர்கள் மற்றும் யு.எஸ் துணை அதிபார் ஜோ பிடெனும் கலந்து கொள்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியிலிருந்து வெளியேறும் துணை-அதிபர் டிசம்பர் 8-9திகதிகளில் ஒட்டாவாவில் ட்ரூடோ முதல்வர்கள் ஆகியோரை சந்தித்து கனடா-யு.எஸ்.உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடு வார்களென வெள்ளை மாளிகை இன்று விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
பிரதம மந்திரி தனது மாகாண மற்றும் பிராந்திய சகாக்களுடன்- முதல் தேசங்கள், இனுயிட் மற்றும் மெட்டிஸ் தலைவர்கள் உட்பட்ட பிரதிநிதிகளுடன் சந்திக்க உள்ள திட்டத்தை உறுதிப்படுத்திய அறிவிப்பு வெளிவந்த சிறிது நேரத்தின் பின்னர் அமெரிக்க துணை-அதிபரின் வருகையும் தெரிவிக்கப்பட்டது.
சுத்தமான வளர்ச்சி மற்றும் காலநிலை மாற்ற கட்டமைப்பு குறித்து மாகாணங்களுடன் சேர்ந்து பணியாற்ற லிபரல் அரசாங்கம் முயலும்.
சந்திப்பின் போது இது சம்பந்தமாக இறுதி முடிவெடுக்க அமைச்சர்கள் முன்வருவர் எனவும் நடைமுறை படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் கூறப்படுகின்றது.
பிடென் ட்ரூடோவுடன் பங்கு கொள்ளும் இருதரப்பு சந்திப்பில் கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டாண்மை குறித்தும் விவாதிக்கப்படுமென வெள்ளை மாளிகை விடுத்துள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.