கனடிய பிரதமருக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவிற்கு அச்சுறுத்தல் விடுத்ததாக சஸ்காச்சுவான் நபரொருவர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் பிரதமருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான தகவல்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக கனடிய பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரதமருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பில் புலனாய்வாளர்களுக்கு கடந்த மார்ச் மற்றும் ஜூலை ஆகிய இரு மாதங்களில் இரு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன்படி தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் குறித்த சந்தேக நபர் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, குறித்த நபர் தங்கியிருந்த குடியிருப்பில் இருந்து பல மின்னணு சாதனப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
– See more at: http://www.canadamirror.com/canada/67286.html#sthash.vA63Hv4q.dpuf