ரொறொன்ரோ-இக்கோடை காலத்தின் வெப்பநிலை ஒரு சீஷோ விளையாட்டு போன்ற உணர்வை ஏற்படுத்தும் என உயர் வானிலை ஆய்வாளர் தெரிவிக்கின்றார்.கோடை பருவகாலம் வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டிற்கும் இடையில் ஊஞ்சலாடும்.
செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட கோடை கால நிலை குறித்து தலைமை வானிலை ஆய்வாளர் கிறிஸ் ஸ்கொட் தெரிவிக்கையில் இந்நிலை ஒரு தள்ளாடு பலகையில் இருப்பது போன்று உணரப்படுமெனவும் கூறியுள்ளார்.
சிசோ பலகை ஒன்றின் ஒருபக்கத்தில் இருந்து கீழே போய்க்கொண்டிருக்கையில் அடமட்டத்தை அடையுமுன்னர் மறுமுனையில் ஒருவர் ஏறியதும் மீண்டும் மேலெழும்புவது போன்று கோடைகாலமும் அமையும்.
கால நிலை தன்னை அறியாமல் சுற்றும் ஒட்டு மொத்தமான ஒரு நிலை எல் நினோவுடன் பசுபிக் சமுத்திரம் சுற்றி சுழலுமென கூறப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் சராசரியை விட வெப்பமான கால நிலையும் சதுப்பு நிலப்பகுதிகள் வழக்கத்தைவிட மிக குளிராகவும் காணப்படும்.
கடந்த கோடைகாலத்தில் மத்திய கனடா இருந்தது போன்று வெப்பமாகவோ அல்லது வரட்சியாகவோ காணப்பட மாட்டாதெனவும் ஸ்கொட் தெரிவித்தார்.
ரொறொன்ரோவில் கடந்த கோடைகாலத்தில் போன்று அதி வெப்பமாக இம்முறை இருக்கமாட்டாதெனவும் தெரிவித்துள்ளார்.
யுகொன் தெற்கு கடல்பகுதிகள் வெப்பமாக காணப்படும்.
நியுபவுன்லாந், லப்ரடோர் சராசரியை விட குளிராக காணப்படும். நுனவுட்டின் தென்பகுதி வழக்கத்தை விட மிக குளிராக காணப்படும் எனவும் வடமேற்கு நிலப்பகுதிகளில் வழக்கமான வெப்பநிலை காணப்படுமெனவும் தெரிவித்தார்.