கனடிய அரசிடமிருந்து அதியுயர் விருது பெற்ற தமிழ் பொலிஸ் அதிகாரி!
ஹால்ரன் பிராந்திய துணைப் பொலிஸ்மா அதிபரான நிசான் துரையப்பா கனடிய மத்திய அளுனரிடமிருந்து ஓடர் ஒவ் மெரிற் விருதினைப் பெற்றுக் கொண்டார்.
இந்த விருதினை பெற்ற முதல் தென்னாசியர் என்ற பெருமையை இவர் பெறுவதோடல்லாது, கனடிய தமிழ்ச் சமுதாயத்தில் கனடிய அரசின் அதியுயர் விருதினைப் பெற்ற முதலாவது பிரதிநிதியாகவும் இருக்கின்றார்.
மாணாக்கர்கள் பொலிசார் நட்புறவுக் குழுவினூடாக பொலிஸ் தொண்டராக 1991ல் இணைந்த நிசான் துரையப்பா 1995ல் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளாக பதவியேற்று தனது பணியை ஆரம்பித்திருந்தார்.
அதன் பிற்கு தனது திறமையால் பலதுறைகளிலும், குறிப்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, குற்றவியல் தடுப்புப் பிரிவு மற்றும் நிர்வாகத் துறை ஆகியவற்றில் பரிணமித்த நிசான் துரையப்பா, சார்ஜன்ட், இன்பெக்டர், சுப்பிரீண்டன் என்ற படிப்படியான பதவியுயர்வுகளிற்கு பின்னர்,
கடந்த ஆண்டு துணைப் பொலிஸ்மா அதிபராகப் பதவியேற்றிருந்தார். இந்த வருட ஆரம்பத்தில் இவரது முயற்சியால் கனடியத் தமிழ் சட்டஅமுலாக்கல் வலையமைப்பு என்ற அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதும்,
அந்த அமைப்பில் கனடாவில் உள்ள அணைத்து சட்ட அமுலாக்கல் பிரிவுகளிலும், முப்படைகளிலும் பணியாற்றும் தமிழ் இளைஞர்கள் யுவதிகளை இணைத்து அவர்களின் மூலமாக கனடியத் தமிழ்ச் சமுதாயத்திற்கு தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்க முன்வந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த விருது குறித்து கருத்துத் தெரிவித்த நிசாந் துரையப்பா அவர்கள். இந்த விருதுவிழாவில் கலந்து கொண்டது மிகவும் உணர்வு பூர்வமானதும், எனது வாழ்வில் ஒரு பெரியதொரு சாதனை நாளாகவும் இருந்தது. பல பொலிசாரும் தங்களிலான பங்களிப்பை நாட்டுக் வழங்கியே,
சமுதாயத்தை ஒரு சிறந்த, நற்பண்புள்ள சமுதாயமாக வைத்திருக்கின்றார்கள். அந்த வகையில் அவர்களின் உழைப்புக் கிடைத்த வெற்றியாகவும் இதனைக் கருதுகின்றேன்” எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் இவர் குடும்ப சகிதம் கலந்து கொண்டிருந்தார். தமிழ் இளைஞர்கள், யுவதிகள் சட்ட அமுலாக்கல் துறையில் பணியாற்ற ஏதுவாக அவர்களிற்கான அறிவூட்டல்களை மேற்கொள்ளும் நடவடிக்கையும், சமூகப் பாதுகாப்புத் தொடர்பான கருத்தரங்குகளையும் நடத்துவதில் இவர் ஏனைய தமிழ் சட்ட அமுலாக்கல் உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயலாற்றி வருகின்றார்.