கனடியத் தமிழர்களே! மாகாண மத்திய கட்சிகளின் வேட்பாளராக விரும்புகின்றீகளா? தகுதிகளும் தராதரங்களும் இதோ!!
கனடாவில் குறிப்பாக ஒன்றாரியோ மாகாணத்தில் தேர்தல் 2018ம் ஆண்டு யூன் மாதமே இடம்பெற இருந்தாலும் அந்தத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தமிழர்கள் பலரும் தங்களைத் தயார் படுத்தி விட்டார்கள்.
குறிப்பாக சியான் சின்னராஜா, தியோ அந்தனி, நிமால் விநாயகமூர்த்தி, கவிதா செந்தில், ராகவன் பரஞ்சோதி, அரி அரியரத்தினம், குயின்ரஸ் துரைசிங்கம், விஜேய் தணிகாசலம, லோகன் கணபதி; உள்ளிட்ட,
30க்கு மேற்பட்ட தமிழர்கள் திரு.பற்றிக் பிறவுனின் ஒன்றாரியோ முன்னேற்றவாத கண்சவேட்டிவ் கட்சியின் சார்பில் மாத்திரம் போட்டியிட முனைத்தாலும் இவர்கள் தமது தகுதியைப் பாதுகாப்பது போன்றவற்றினைப் புகட்ட வேண்டிய தேவையுள்ளது.
இதனை விட மாநாகர கவுன்சிலர், நகர கவுன்சிலர், கல்விச் சபை அறங்காவலர் என போட்டிகளிற்கு பல தமிழர்களும் கனடாவில் இப்போது ஏற்பட்டுள்ள அரசியல் மேல்நிலையால் போட்டியிட உந்தப்பட்டுள்ளனர்.
ஏனென்றால் கடந்த மத்திய பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், தேர்தலில் போட்டியிட உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர் கனடாவில் கட்சிகளால் தேர்தல்களில் இருந்து அகற்றப்பட்டனர்.
கண்சவேட்டிவ் கட்சி 5 வேட்பாளர்களை போட்டியிலிருந்து நீக்கியது, லிபரல் கட்சி 3 வேட்பாளர்கள் காணமல் போணார்கள், புதிய ஜனநாயகக் கட்சியிலிருந்து 2 பேரும், பசுமைக் கட்சியிலிருந்து ஒருவரும் உத்தியோகபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தனர்.
எனவே இவ்வாறானதொரு நிலை ஏற்படாதவாறு போட்டியாளர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது. அவர்கள் குறிப்பிடும் தகுதிநிலைகள் தங்களிற்கு இல்லையென்றால் அவர்களாகவே போட்டியிடாமல் ஒதுங்குவது அவர்களது மாணத்தைக் காக்கவாவது உதவும்.
கடந்த ஒரு மாத்திற்குள் மாத்திரம் முன்னேற்றவாத கண்சவேட்டிவ்க் கட்சியைச் சேர்ந்த ஐந்து வேட்புமனுவாளர்கள் நீக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இது எல்லாக் கட்சிகளுக்கும், மாநரக, நரக அலகுகளிக்கும் பொருந்தும். எனவே இது சகல கட்சிகளிலும் பிரியமுள்ளவர்களிற்கான ஒரு தகவலாகவே இங்கு பரிமாறப்படுகின்றது.
இவ்வாறு நீக்கப்பட்ட ஐந்து வேட்பாளர்களில் ஒருவர் மார்க்கம் சார்ந்தவராகவும் இருவர் பிறம்ரன் சார்ந்தவர்களாகவும். ஒருவர் ரொறன்ரோவைச் சார்ந்தவராகவும், ஒருவர் ஒட்டாவவைச் சார்ந்தவராகவும் இருக்கின்றார்.
எனவே “நா காக்க”, “செயல் காக்க”, என்பனவற்றிக்கும் மேலாக நற்சாண்றிதல் பெறும் வகையில் “நடத்தை காக்க” என இந்த விவகாரம் நீண்டு செல்கின்றது. சமூகவலைத் தளங்களே இவ்வாறான குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களையும் கண்டுபிடிக்க வழியேற்படுத்தி நிற்கின்றது.
ontario-pcs-dump-nomination-candidate-over-muslim-trash-comment