கனடா வெஸ்ட்ஜெட் விமானம் திசைதிருப்பப்பட்டது
வான்கூவரில் இருந்து ஒட்டாவா நோக்கி பயணித்த வெஸ்ட்ஜெட் விமானம் தன்டர் பே நகருக்கு திசை திருப்பப்பட்டுள்ளது. குறித்த விமானத்திற்கு திடீரென விடுக்கப்பட்ட அச்சுறுத்தலை அடுத்து குறித்த விமானம் திசைதிருப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த அச்சுறுத்தலானது நம்பகத்தன்மை அற்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச்சுறுத்தல் நம்பகத்தன்மை அற்ற போதிலும், பயணிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி விமானத்தை திசைதிருப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தாம் உள்ளானதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கனடா போக்குவரத்து சபையின் கோரிக்கைக்கு அமைவாக விமானம் திசை திருப்பப்பட்டு பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
விமானம் அவசரமாக திசைதிருப்பப்பட்டு தரையிறக்கப்பட்ட வேளை, எவரும் பாதிக்கப்படவில்லை எனவும், குறித்த போலி அச்சுறுத்தல் குறித்து இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.