கனடா விபத்தில் இலங்கை தமிழர் இளைஞர் பலி! வழக்கில் ஏற்பட்ட திருப்பம்போதுமான ஆதரங்கள் கிடைக்காமையினால் சந்தேக நபர் ஒருவர் விடுக்கப்பட்டுள்ளார்.
Scarborough பகுதியில் Lester B. Pearson Collegiate Instituteஇல் கல்வி கற்ற இம்மானுவேல் சின்னதுறை என்ற 17 வயதுடைய இலங்கை இளைஞன் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார். 2014ஆம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது சம்பவத்தின் ஒரு சந்தேக நபரை விடுவிப்பதற்கு நீதிமன்றம் தீர்மானித்தது. “சான்றுகள் அனைத்தையும் பார்த்து, நிச்சயமாக நான் ஒப்புக்கொள்ளலாம், இதில் சந்தேகம் உள்ளது, ஆதாரம் இருப்பினும் குறைவாக உள்ளது” என உச்சநீதிமன்ற நீதிபதி Shaun Nakatsuru தெரிவித்துள்ளார்.
2014ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதலாம் திகதி BMW வாகனத்தை ஓட்டி வந்த 16 வயதுடைய வாகனத்தில், இம்மானுவேலின் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் அவர் உயிரிழந்துள்ளார். 16 வயதுடையவரின் வாகனத்துடன் Johan Vaz என்ற 25 வயதுடைய இளைஞரின் வாகனம் ஓட்ட பந்தயத்தில் ஈடுப்பட்டுள்ளது.
இந்த நிலையில் Johan Vaz என்ற இளைஞரே வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இளைஞர் குற்றவியல் நீதி சட்டத்தின் கீழ் பெயரிடப்படாத BMW வாகன சாரதி, தெருவில் உயிரிழிப்பு ஏற்படும் வகையில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக ஒருவருடத்திற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டார்.
அதற்கமைய அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 5 வருடங்கள் வாகன ஓட்ட தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் Johan Vaz ஓட்டிய வாகனத்தின் வேகத்திற்கமைய அது ஏற்றுகொள்ள முடியாது. எனினும் அவர் இந்த கொலைக்கான சந்தேக நபர் அல்ல கூறி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.