கனடா-மார்க்கம், ஒற்றை-வாகன விபத்தில்17-வயது பெண் கொல்லப்பட்டார்.
வெள்ளிக்கிழமை காலை மார்க்கம் பகுதியில் இடம்பெற்ற ஒற்றை-வாகன விபத்தில் 17வயது பெண் கொல்லப்பட்டதுடன் இரண்டு பெண்கள் கடுமையான காயங்களிற்கு ஆளானார்கள்.
இக்கோர விபத்து அதிகாலை 3-மணியளவில் 14-வது அவெனியு மற்றும் மார்க்கம் வீதி குறுக்கீட்டு சந்தி அருகாமையில் நடந்துள்ளது.
பெண் சாரதி சம்பவ இடத்தில் இறந்து விட்டதாக யோர்க் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.
21 மற்றும் 22 வயதுடைய மற்றய இரண்டு பெண்கள் உயிராபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
வாகனத்திற்குள் சிக்கிகொண்ட பெண்களை மீட்க தீயணைப்பு படையினர் ஹைட்ராலிக் மீட்பு கருவியை உபயோகிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் தெரியவரவில்லை.
விபத்து நடந்த பகுதி கூர்மையான இடது பக்க திருப்பம் கொண்டதால் எப்போதும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளதென அப்பகுதி குடியிருப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை மிகுந்த மூடுபனி காணப்பட்டது. இந்நிலையில் வீதிகள் மறைக்கப்பட்டிருந்தன. பாதைகளை அண்மிக்கும் போது மிக மிக அவதானம் தேவை.