கனடா- புதிய விதிகளை தொடர்ந்து TD வங்கி அடமான கட்டணங்களை அதிகரிக்கின்றது.
மத்திய அரசாங்கம் அடமான விதிகளை இறுக்கியதை தொடர்ந்து அடமான கட்டணங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலை ஏற்படும் என வங்கிகள் ஏற்கனவே எச்சரித்தும் உள்ளன.
TD-வங்கி தனது பிரதம அடமான கட்டணத்தை 2.7சதவிகிதத்திலிருந்து 2.85சதவிகிதமாக அதிகரித்துள்ளது. மாறக்கூடிய அடமானங்களிற்கு மட்டுமே இந்த மாற்றம் பொருந்தும்.
மாதாந்த அடமான கட்டண அதிகரிப்பு சிலருக்கு உடனடியாக ஏற்படுத்தப்படும். மற்றவர்களிற்கு அவர்களின் மாதாந்த அடமான கட்டணத்தின் பெரும் பகுதி முதலை விட வட்டிக்கு செல்லும்.