கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ, அடுத்த மாதம் இந்தியா வருகிறார். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ருடியூ, பிப்ரவரி 17ம் தேதியன்று இந்தியா வருகிறார்.
23ம் தேதி வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஜஸ்டின், பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இருநாட்டு உறவுகள் மட்டுமின்றி, வர்த்தகம், கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு, திறன்மேம்பாடு, விண்வெளித்துறை உள்ளிட்டவற்றில் இருநாடுகளின் பங்களிப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். தீவிரவாதத்தை தடுப்பது, பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.
இந்தியா, கனடா இடையேயான நியூக்கிளியர் கூட்டமைப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
கனடாவில் சாப்ட்வேர் துறையில் இந்தியர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில், விசா வழங்குவதை எளிதாக்கும் நடைமுறைகள் குறித்து இருநாட்டு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில், கனடா பிரதமர் ஜஸ்டின், மோடி ஆகியோர் சந்தித்தனர்.
சுமார் 6 மாதங்களில் மீண்டும் இருவரும் சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.