கனடா-நெடுஞ்சாலை 401கிழக்கு பாதையில் பாரிய மோதல்
நெடுஞ்சாலை 401 ரொறொன்ரோ கிழக்கு பாதையில் டொன் வலி பாக்வே சரிவுப்பாதையில் இடம்பெற்ற வாகன மோதலில் இருவர் உயிராபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக அவசர மருத்துவ சேவையினர் அறிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட லேன்களும் சரிவுப்பாதையும் பல மணித்தியாலங்களிற்கு மூடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மோதலிற்கான காரணம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.