கனடா நாட்டில் 8 நோயாளிகளை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண் செவிலியர் ஒருவர் மீதான நீதிமன்ற விசாரணை விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள Woodstock நகர் மருத்துவமனை ஒன்றில் Elizabeth Wettlaufer(49) என்பவர் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.
எலிசபெத் பணியில் இருந்தபோது அடுத்தடுத்து மர்மமான முறையில் நோயாளிகள் உயிரிழந்தது மருத்துவர்களை சந்தேகத்தில் ஆழ்த்தியது.
பின்னர், நோயாளிகள் உள்ள பகுதியில் கண்காணிப்பு கமெராக்கள் பொருத்தப்பட்ட ஆராய்ந்தபோது எலிசபெத் பெரும் சதியில் ஈடுப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
படுக்கையில் இருந்த 8 நோயாளிகளை அவர் கொடூரமாக கொன்றதாக கூறப்படுகிறது. மேலும், 4 நோயாளிகளை கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
எனினும், இக்குற்றங்கள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று வீடியோ காணொளி வழியாக நீதிபதியிடம் பேசிய எலிசபெத் தன்னுடைய வழக்கின் விசாரணை திகதியை அறிந்துக்கொண்டுள்ளார்.
இதன் மூலம் எதிர்வரும் 21-ம் திகதி நீதிமன்றத்தில் எலிசபெத் நேரில் ஆஜராகிறார்.
இதற்கு பின்னர், இவ்வழக்கு தொடர்பான அடுத்தக்கட்ட விசாரணை திகதி அவருக்கு அறிவிக்கப்படும் என வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.