கனடாவில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை ஊதியத்தில் வருகிறது மகிழ்ச்சி
கனடா நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை ஊதியம் வழங்கும் புதிய சட்டத்திற்கு அந்நாட்டு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிழக்கு கனடாவில் உள்ள Prince Edward Island என்ற மாகாண அரசு தான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2014-ம் ஆண்டு புள்ளிவிபரப்படி, 1,46,283 பேர் மக்கள் தொகை கொண்ட இந்த மாகாணத்தில் கிரீன் கட்சி ஆட்சி செய்து வருகிறது.
இந்த கிரீன் கட்சியின் தலைவான Peter Bevan Baker என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இம்மாகாணத்தை சேர்ந்த ஒவ்வொரு குடிமகனும் வறுமையின் பிடியில் இருந்து விடுதலை ஆகவேண்டும்.
மேலும், பல்வேறு துறைகளின் தங்களது திறமைகளை வெளிக்கொண்டுவர வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது.
எனவே, இம்மாகாணத்தை சேர்ந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் அடிப்படை ஊதியம் வழங்கும் புதிய சட்டத்திற்கு மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், மத்திய அரசும் இதற்கான நிதியுதவி அளிப்பதாக உறுதி செய்துள்ளதாக Peter Bevan Baker தெரிவித்துள்ளார்.
எனினும், ஒவ்வொரு குடிமகனுக்கு எவ்வளவு ஊதியம் அளிக்கப்படும் என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான நெதர்லாந்தில் இச்சட்டம் ஏற்கனவே அமுலில் இருந்து வருகிறது.
ஸ்கொட்லாந்தில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசனை நடந்து வரும் நிலையில், பின்லாந்து இச்சட்டத்தை அடுத்த ஆண்டு அமுலுக்கு கொண்டுவர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.