கனடா தலைநகர்-ஒட்டாவாவில் வெகுவிரைவில் சின்ன வீடு கட்டலாம்!
கனடா-ஒட்டாவா வீட்டு சொந்த காரர்கள் வெகுவிரைவில் அவர்களது வீட்டின் புறத்தில் சின்ன வீடுகளை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படும்.
இந்த வீடுகள் மலிவு வீடுகளின் கையிருப்புக்களை அதிகரிக்கலாம் என மாகாண அரசாங்கம் பார்க்கின்றது.
இழைய மற்றும் மூத்த சமுதாயம், புறநகர் மற்றும் நகர்ப்புற ஒரு வருட ஆலோசனையின் பின்னர் இந்த சட்டம் வெளியிடப்பட்டதென தெரிய வந்துள்ளது.
இந்த வீடுகளை அமைப்பதற்கும் சில விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
நகர்ப்பகுதிகளில் பிரதான வீட்டின் அளவை விட 40சதவிகிதத்திற்கும் அதிகமற்றதாகவும் நிலப்பரப்பின் 40சதவிகிதமானதாகவும் ஒரு அடுக்காகவும் இருக்கவேண்டும்.
கிராமபுறங்களில் இரண்டு அடுக்கு, பிரதான வீட்டின் அளவிலும் 40சதவிகிதத்திற்கும் குறைவான முழு நிலப்பரப்பின் 40சதவிகிதமாக அமைய வேண்டும்.
இரு பகுதிகளிலும் கூரை முற்றங்கள் அமைக்க அனுமதி இல்லை.
அயலவர்களின் தனிமைக்கு பங்கம் விளைவிக்க கூடாது.