கனடா-சஸ்கற்சுவானில் திடீர் வெள்ளம்.
சஸ்கற்சுவான்.சுவிட் கரென்ட் பகுதியில் திடீரென ஏற்பட்ட பலத்த மழை காரமாக வெள்ளம் ஏற்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
வாகனங்கள் தண்ணீருக்குள் மிதந்தன.சில வாகனங்கள் கட்டுப்பாடின்றி நகரத்தொடங்கின.
நகரில் ஒரு மணித்தியாலத்திற்கும் குறைந்த நேரத்தில் ஆறு சென்ரிமீற்றர்களிற்கும் மேலான மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பலத்த மழை நீரை வடிகால்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. வீடுகள் சிலவற்றின் நிலக்கீழ் பகுதிகள் மற்றும் தியேட்டர்கள் சில வற்றிற்குள்ளும் வெள்ளம் சென்றுவிட்டிருந்தது.